உன்னுடைய தாலந்தைப் புதைத்து வைக்காதே

தம்பி: அண்ணே, ஒரு இவஞ்சலிஸ்ட் மெஸ்ஸேஜ கேட்டேண்ணே. அவரு மெஸ்ஸேஜு ரொம்ப பவர்புல்லா இருந்துச்சு, ஸூப்பரா மியூசிக் போட்டுகிட்டே பியூட்டிபுல்லா பாடிணாருண்ணே. அவருக்கு தாலந்துகளை அள்ளிக்கொடுத்து கர்த்தர் ஆசீர்வதிச்சிருக் காருண்ணே. ம்ம்ம்… எனக்கு மட்டும் அந்த மாதிரி ஒரு தாலந்தும் இல்லேண்ண.


அண்: என்ன தம்பி கவலைப்படுறே. கர்த்தர் எல்லோருக்கும் ஏற்றாற்போலதான் தாலந்துகளைக் கொடுத்திருக்கிறார் தெரியுமா.


தம்பி: அட நீங்க வேறண்ண. நான் பேசினா எனக்கே புரியாது. நான் பாடி நீங்க கேட்டதில்லைன்னு நினைக்கிறேன். நான் பாடினால் கழுதைதான் வரும். இப்போ கழுதைகூட வருமான்னு சந்தேகமாயிருக்கு.


அண்: பேசுவது, பாடுவது, மியூசிக் போடுவது மட்டும்தான் தாலந்துகள்ன்னு நினைக்கிறதுனால தான், நிறையப்பேர் உன்னை மாதிரியே கவலைப்பட்டுகிட்டு தன்னுடைய தாலந்துகளைக் கண்டுபிடிக்க மறந்துடுறாங்க. திறமையாகப் பேசுவதுதான் தாலந்துன்னு மோசே நினைத்ததால்தான், (யாத்; ௪:௧0)ல கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்க அழைத்தபோது, தான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.


தம்பி: ஆணா பார்வோன் ராஜாவே ஆடிப்போற மாதிரி பெரிய பெரிய அற்புதம் எல்லாம் மோசே செய்து எகிப்தையே ஒரு கலக்கு கலக்கிட்டாருல்லண்ணே. என்னால அப்படியும் பண்ணமுடியாதே.


அண்: மத்தேயு ௨௫:௧௪-௩0ல இயேசு பரலோகராஜ்யத்தைக்குறித்த உவமையில், ஐந்து தாலந்து கொடுத்தவனிடத்தில் ஐந்துதாலந்தையும், இரண்டு கொடுத்தவனிடத்தில் இரண்டையும், ஒரு தாலந்து கொடுத்தவனிடத்தில் ஒரு தாலந்தையும் எதிர்பார்க்கிறார். இதில் யாரிடத்தில் எவ்வளவு தாலந்து கொடுக்கிறாரோ அதற்கேற்ற பலனைத்தான் எதிர்பார்க்கிறார். அதனால ஐந்து தாலந்தையுடையவன் எல்லோரிலும் பெரியவனும் அல்ல, ஒரு தாலந்தையுடையவன் எல்லோரிலும் சிறியவனும் அல்ல. அதனால பேச, பாட முடியலியேன்னு வருத்தப்படுறத நிறுத்திட்டு கர்த்தர் உனக்கு கொடுத்துள்ள தாலந்துகளை அவருக்கென்று முழுமையா பிரயோஜனப்படுத்தினா, கர்த்தர் சந்தோஶப்படுவார்.


தம்பி: இப்பதாண்ணே புரிஞ்சுது, நானும் இதுவரை அவரைப்போல, இவரைபோல நா இல்லையேன்னு வருத்தப்பட்டுகிட்டே இருந்துட்டேன். இனி கர்த்தர் எனக்கென்று கொடுத்த தாலந்தைக்கொண்டு முழுமையாக கர்த்தரின் மகிமைக்காக பிரயோஜனப்டுத்துவேன்.


அண்: சரி தம்பி, இதைக்கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஶமாயிருக்கு. கடவுள் சித்தமானா பிறகு சந்திக்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets