உபவாசமா பட்டினியா?

தம்பி: அண்ணே எப்படி இருக்கீங்க? ஈவினிங் பார்க்கலாம்ணே, இப்போ நான் வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன்.


அண்: ஒ அப்படியா, சரி ஒரு காபியாவது சாப்பிட்டுட்டு போப்பா. என்ன அவசரம்.


தம்பி: அவசரம்லாம் ஒண்ணுமில்லைண்ணே. இன்னைக்கு எதுவும் சாப்பிடமாட்டேன் ஏன்னா நான் பாஸ்டிங்ல இருக்கேன்.


அண்: என்னது பாஸ்டிங்கா? இப்போவா?


தம்பி: ஆமாண்ணே பாஸ்டிங்தான், பாஸ்டிங் இருந்தா நல்லதுதானண்ணே.


அண்: பாஸ்டிங்குன்னு சொல்லிட்டு வேலைக்குப் போய்ட்டு இருக்கியே, அதான் கேட்டேன்.


தம்பி: நான் இப்போ ஆபீசுல புல் பிஸியாயிருக்கேன் அதனாலதான் பாஸ்டிங் இருந்துகிட்டே வேலையையும் பார்க்கலாமுன்னு நினைச்சேன். அதுல என்ன தப்பிருக்கு?


அண்: வேலைக்குப்போனா பாஸ்டிங் எதுக்காக இருக்கிறீயோ அது பலனில்லாமல் போயிடுமே.


தம்பி: அது எப்படிண்ணே. இந்த பிஸி நேரத்திலேயும் பாஸ்டிங் இருக்கிறேனேண்ணு கர்த்தர் என் மேல சந்தோஶம்தானேண்ணே படுவார். பிறகு எப்படி பலனில்லாமலிருக்கும்?


அண்: தம்பி, ஏசாயா: “நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய் செய்கிறீர்கள்” என்று கர்த்தர் செல்லியிருக்கிறாரே. உபவாசம் செய்யும் போது நம்முடைய எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைச்சிட்டு, உபவாசமிருக்கிற முழு நேரத்தையும் கர்ர்தருக்கென்று செலவு செய்யணும்.


தம்பி: அப்படின்னா வேலை செய்து பாஸ்டிங் இருந்தா அது வீணா?


அண்: அப்படி பாஸ்டிங் இருந்தா அதுக்கு பேரு பட்டினி. பட்டினி இருந்தா கொஞ்சம் உடம்பு குறையும், சாப்பாடு காசும் மிச்சம். உபவாசத்திற்கேற்ற பெலன் கர்த்தரிடத்தில பெற வேண்டாமா?


தம்பி: இப்ப புரிஞ்சுதுண்ணே. நாளை லீவுல, நிறைய வீட்டு வேலைகள் செய்ய பிளான் பண்ணியிருந்தேன். அதெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு கர்த்தெருக்கென்று முழு நாளையும் செலவழித்து பாஸ்டிங் இருந்து ஜெபம்பண்ணப்போறேன்.


அண்: இத கேட்கும்போது சந்தோஶமாயிருக்கு தம்பி. சரி கர்த்தருக்குச் சித்தமானா பிறகு பார்க்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets