சின்னதா சில பொய்கள் சொன்னா தப்பா?

அண்: என்ன தம்பி எப்படியிருக்கே? ஆமா… உனக்கு ஆபீசுக்கு டைம் ஆயிட்டே? இன்னுமா போகல?


தம்பி: அதுவாண்ணே… நேத்து என்னோட பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தேன், அதனால செம டையர்டு. அதான் காலைல கிளம்ப லேட்டாய்ட்டு, ஆனா ஆபீசுல ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிடலாம்ணே.


அண்: ஏதாவது சொல்லியா? எண்ண சொல்லுவ தம்பி?


தம்பி: சீக்கிரம் வர நினைச்சேன், ஆனா, வழியில ஒரே டிராபிக்குன்னு சொல்லிடுவேன்.


அண்: டிராபிக்கா இருந்துச்சுன்னு சொல்றது சரியில்லயே தம்பி.
தம்பி: வேற ரீசன் சொன்னா கண்டுபிடிச்சுருவாங்கண்ணே, இந்த ரீசன் நல்லா ஒர்க்கவுட்டாகும்ணே.


அண்: அட அத சொல்லலப்பா. இதுக்கெல்லாம் பொய் சொல்லுறியே, தப்பில்லையா தம்பி?


தம்பி: இதுல என்னண்ணே தப்பிருக்கு, ஒரு சின்ன பொய்தானண்ணே. இதனால பரலோகமா கிடைக்காம போகப்போவுது.


அண்: நீ சொன்னாலும் சொல்லாட்டாலும், “வெளி ௨௨:௧௫”ன் படி பொய் சொல்றவுங்களுக்கு பரலோகத்தில் இடமில்லை. நான் சொல்லலப்பா… பைபுள் சொல்லுது.


தம்பி: அண்ணே, அதெல்லாம் பெரிய பொய்யிண்ணே, நா சொல்றது சின்னதா… சில பொய்கள்தானண்ணே.


அண்: லூக்கா ௧௬:௧0 “கொஞ்சத்தில் உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்தில் அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.” ன்னு சொல்லியிருக்கு. இதில இயேசு சின்னதில் உண்மையில்லாதவன் பெரிய விஶயத்திலும் உண்மையாயிருக்கமாட்டான்னுதான் சொல்லுகிறார். அதனால எல்லா விஶயத்திலும் உண்மையாயிருக்கனும். சின்னதோ பெரியதோ, பொய் பொய்தான் தம்பி. டையர்டா வேலை பார்த்தீனா உங்க கம்பெனிக்கும் பிரயோஜனமில்லையே. இந்த மாதிரி சிட்டுவேஶனுக்காகத்தானே ஆபீசுல லீவு தர்ராங்க. லீவு போட்டு ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதானே.


தம்பி: லீவை எடுத்து வேஸ்டு பண்ணாம வெக்கேஶனுக்கு யூஸ் பண்ணலாமுன்னு நினைத்திருந்தேன். ஆனா சின்ன பொய்யால பரலோகத்தையே வேஸ்ட் பண்ணப்பார்த்தேன்னு இப்பதான் புரிஞ்சுதுண்ணே.


அண்: ரொம்ப சந்தோஶம் தம்பி. லீவு போட்டு நல்லா ரெஸ்ட் எடு. கடவுள் சித்தமானா பிறகு சந்திக்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets