பொருமையின் எல்லை

அண்: என்ன தம்பி எப்படி இருக்கே? சவுக்கியமா?


தம்பி: ஓரளவு சவுக்கியம்ணே. ஆபீசுல என் கொலீக் ஒருத்தன் என் கிட்ட வம்புக்குன்னு பிரச்சனை பன்னிக்கிட்டே இருந்தான். நானும் பொருமையா இருந்து இருந்து பார்த்தேன். ஆனா அவன் ரொம்ப டார்ச்சர் பன்ன ஆரம்பிச்சான். அதான் திட்டி தீர்த்துட்டேன். இனி என் வம்புக்கு வரவே மாட்டாண்ணே.


அண்: என்னப்பா தம்பி, யாரையும் அப்படி திட்டக்கூடாதுல்லப்பா


தம்பி: நான் யாரையும் திட்டுரவன் இல்லண்ணே. ஆனா பொருமைக்கும் ஒரு லிமிட் இருக்குல்லண்ணே. நாம ரொம்ப குனிஞ்சா தலைல ஏறி பம்பரம் ஆடுவாங்கண்ணே.


அண்: இப்படித்தான் உன்னை மாதிரிதான் நிறையப்பேர் பொருமைக்கு ஒரு லிமிட்ட வச்சுக்குறாங்க. பொருமைக்கு லிமிட் வைக்சா அதுக்கு பேரு பொருமையே அல்ல. ரோமர் 12:12ல உபத்திரவத்தில் பொருமையாயிருங்கள்ன்னு பவுல் சொல்கிறாரே. அப்போ நம்ம பொருமையாதானே இருக்கனும்.


தம்பி: ரொம்ப பொருமையா இருந்தோம்னா நம்மள இளிச்சவாயன்ன்னு நினைச்சுக்குவாங்கண்ணே.


அண்: மத்தேயு 27:14ல இயேசுவைக்குற்றம் சாட்டின போது அவர் ஒன்றும் சொல்லலையே. தேவ சித்தம் நிறைவேர அவர் பொருமையாயிருந்தாரே.


தம்பி: ஆனா சில சமத்துல, நம்ம பவர் என்னன்னு கொஞ்சம் காட்டனும்லண்ணே.


அண்: ஆனா இயேசு அப்படி செய்யலையே. அவர் சிலுவையிலிருந்தபோது, மத்தேயு 27:40ல “அந்த வழியாய் போனவர்கள், உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கிவா” என்று அவரைத் தூஷத்தார்களே. அது போதான்னு 41, 42ல பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அவரைப்பரியாசம் பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ள திராணியில்லை”ன்னு சொல்லி அவரை வார்த்தையால டார்ச்சர் பண்ணினாலும் அவர் முடிவுபரியந்தம் பொருமையாய் சகிச்சுக்கிட்டாரே. அதேபோல நாமும் தூஷிக்கப்படும்போது எல்லையில்லா பொருமையாய் இருந்தோம்னா அதுவே சாட்சி, உன் கொலீக்கே உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுவான். தேவனுடைய நாமமும் உன்னால மகிமைப்படும்.


தம்பி: ஆமாண்ணே இப்ப புரிஞ்சுதுண்ணே. பொருமையா இருப்பதற்கும் ஒரு லிமிட் உண்டுண்ணு நினைச்சதாலதான், அவனை திட்டிட்டேன். உடனே போய் நான் மன்னிப்புக்கேட்கப்போரேன்ணே.


அண்: ரொம்ப சந்தோஷம் தம்பி, சரி அப்புறம் சந்திக்கலாம்.


தம்பி: சரி அப்புறம் பார்க்கலாம்ணே.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets