உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள்

அண்: தம்பி உங்கள பார்த்து ரொம்ப நாளாச்சு, சவுக்கியமா?


தம்பி: ம்ம்ம்… ஏதோ இருக்கேன்.


அண்: என்னப்பா பதில் சரியில்லயே. என்ன ஆச்சு. எனி பிராப்ளம், சொல்லுப்பா?


தம்பி: வேலை செய்ர இடத்துல கொஞ்சம் பிராப்ளம். ஏங்கூட வேல பார்க்கிற ஒருத்தர், நா நல்லா வேல செய்யுரது பிடிக்காம, இல்லாதது போல்லாததெல்லாம் மானேஜர் கிட்ட போட்டுக் கொடுத்திட்டான். இத உண்மைன்னு நம்பி மானேஜர் என்ன கன்னா பின்னான்னு திட்டிட்டாரு. அதான் கொஞ்சம் அப்செட்.


அண்: உன்ன பத்தி தவறா சொன்ன காரியங்களெல்லாம் உண்மையில்லைல? அப்போ ஏன் கவலப் படுர? ரெண்டுபேரும் உன்ன சரியா புரிஞ்சிக்கல அவ்வளவுதான், அதனால அவுங்கள மண்ணிச்சிடு. பிராப்ளம் சால்வ்டு.


தம்பி: ஏண்ணே நீங்க வேற, போட்டுக்கொடுத்தது என் காலீக், அதக் கேட்டுட்டு திட்டினது என் மானேஜர் இவங்கள நா எதுக்குண்ணே மன்னிக்கணும், நான் தா தப்புப் பண்ணலியே?


அண்: தம்பி, இயேசு சிலுவைல தொங்கிக்கொண்டிருக்கும் பொழுது என்ன சொன்னாரு?


தம்பி: சிலுவையில தொங்கிக்கொண்டிருந்தப்போ நிறைய வார்த்தைகள் சொன்னாரே, நீங்க எத சொல்ல வாரீங்க?


அண்: இயேசு கிட்ட தவறு ஏதும் இல்லாதபோதும் ஜனங்களுக்காக, “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” என்று பிதாவினிடத்தில் மன்னிப்புக்கேட்டாரே. அதுபோல நாமும் பிறறை மன்னிக்கணும் இல்லயா?


தம்பி: இயேசுவால மன்னிக்க முடியும், ஏன்னா அவர் தேவ குமாரன். ஆனா நா எப்படி…..


அண்: அட அப்படி இல்லப்பா. நாமும் பிறரை மன்னிக்கவேண்டும், ஆசீர்வதிக்கவேண்டும் என்றுதான் எதிர்பாக்கிறார். லூக்கா ௬:௨௭,௨௮ ல்ல இயேசு தாம் தெரிந்து கொண்ட சீஶர்களைப்பார்த்து என்ன சொல்றார்?


தம்பி: இயேசு என்ன சொல்றாருண்ணே? “…உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்,


அண்: உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்று இயேசு தம்முடைய சீஶர்களைப்பார்த்து சொல்றாரு. அப்போ, நாமும் அப்படி இருந்தா இயேசுவுக்கு ரொம்பப் பிடிக்கும் இல்லயா. இயேசுவுக்கு பிடிக்கிற காரியத்த செய்ய இஶ்டமா தம்பி?


தம்பி: இஶ்டமாவா? இயேசுவுக்கு பிடிக்கிற காரியத்தை செய்கிறதுல எனக்கு எப்பவுமே சந்தோஶம்தான். நா இது வரைக்கும் என்னைப்பகைக்கிறவங்களை, மன்னிக்கக்கூடாது, அவுங்களை விட்டு விலகணும், அவுங்கள மதிக்கக் கூடாதுன்னுதான் தவறா நினைச்சிருந்தேன். அப்படி நினைச்ச வரைக்கும் என் மனசுல ஒரே துக்கம், எரிச்சல், கோபம் ன்னு மனது முழுக்க பாரமா இருந்துச்சு. அவுங்களை இந்த நேரத்துல இருந்து நான் தவறா நினைக்கிறதில்லை. இதை நினைக்கும்போதே என்னா சந்தோஶமா இருக்கு.


அண்: இதை கேக்கிற எனக்கும் ரொம்ப சந்தோஶமா இருக்கு. அப்போ நான் கிளம்புறேன்.


தம்பி: சரி அண்ணே, உங்கள சந்திச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஶம். கடவுள் சித்தமானா பிறகு சந்திக்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets