இறைவன் தந்த நமது ஆலயம்

பல்லவி

இறைவன் தந்த நமது ஆலயம்

சிகாகோவின் தமிழ் ஆலயம்

திருவசனம் தினமளிக்கும் தூயவரின் ஆலயம்

தமிழ் ஐக்கிய கிறிஸ்து ஆலயம்.

சரணங்கள்

இயேசு அன்பை ருசிக்கும் ஆலயம்

சிகாகோவில் இருக்கும் ஆலயம்

வாரந்தோறும் முழு இரவு ஜெபம் நடத்தும் ஆலயம்

ஆத்துமாவைத் தேற்றுகின்ற ஜீவ ஆலயம்

தேவ ஊழியர் தேவ வார்த்தை விதைத்த ஆலயம்

கடல் தாண்டி வந்த போதிலும்

காத்தீரைய்யா கழுகைப் போலவே

அன்பு கொண்ட காரணத்தால் அனைத்ததைய்யா உந்தன் கரம்

சொந்தங்களை விட்ட போதும் பந்தம் தந்தீரே

தமிழ் சபையை எமக்கு ஈந்து மகிழச் செய்தீரே

ஊழியங்கள் தாங்கும் ஆலயம்

ஊக்கமாக ஜெபிக்கும் ஆலயம்

சிறியோர் பெரியோர் யாவரையும் கிறிஸ்துவுக்குள் வளரச் செய்து

சாட்சியாக வாழ வைக்கும் தேவ ஆலயம்

தூய ஆவி வழி நடத்தும் கிறிஸ்து ஆலயம்