நல்லா பேசுற கள்ள போதகர்

அண்: என்ன தம்பி, அப்செட்டா இருக்கிறமாதிரி இருக்கு. யாரும் ஏதாவது சொன்னாங்களா?


தம்பி: வெளி ஊர்ல இருந்து இங்கு பிரசங்கம் பண்ண வந்த, எனக்கு தெரிஞ்ச பிரசங்கியார் ஒருவர் எங்க வீட்டுல தங்கியிருக்காருண்ணே.


அண்: அட அதுக்குப் போய் ஏம்பா சோகமா இருக்க. சந்தோஶப்பட வேண்டிய விஶயம் தானே?


தம்பி: சந்தோஶமாதானண்ணே இருந்தேன், அவரு இப்படில்லாம் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி


அண்: நீ சங்கடப்படும்படியா அப்படி என்னதாம்பா சொன்னாரு?


தம்பி: என்னுடைய சில பாவங்களை சுட்டிக்காட்டினாரு, அத கேட்டு என் மூடே ஸ்பாயிலாயிட்டுண்ணே. இவரு மத்த போதகர் மாதிரி இல்லண்ணே, கள்ள போதகரா இருப்பாரோன்னு தோணுது.


அண்: அவர் சொல்றதுல… ஏதாவது நீ செய்யாத காரியம் இருக்குதா தம்பி?


தம்பி: கரெக்டா நா செய்கிற காரியத்தைதான் சொன்னாரு. ஆனா… அதுக்குப்பதிலா ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசியிருந்தா எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கும்?


அண்: இப்படித்தான் சிலர் “சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்கு திரளாக சேர்த்துக்கொண்டு சத்தியத்திற்கு செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும்காலம் வரும்”ன்னு ௨தீமோத்தேயு ௪:௩,௪ல்ல பவுல் சொல்லியிருக்கிறாரே.


தம்பி: ஆனா அதுக்காக இப்படி பாவத்தையெல்லாம் சுட்டிக்கட்டின்னா கஶ்டமாயிருக்குல்லண்ணே.


அண்: ௨தீமோத்தேயு௪:௨ல்ல பவுல் தீமோத்தேயுவுக்கு “நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி கடிந்துகொண்டு புத்திசொல்லு”ன்னுதானே சொல்றாரு? இப்படித்தான் ௨.சாமுவேல் ௧௨:௧௩ல்ல நாத்தான் தாவீது செய்த பாவத்தை கண்டித்து உணரச் செய்தபோது தாவீது மனம் திரும்பினானே. அப்போ நாத்தான் கள்ள தீர்க்கதரிசின்னு சொல்றியா? நம்முடைய பாவத்துல இருந்து விடுதலை பெறுவதற்கு உதவாமல், நம்மை சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்றவுங்கதான் உண்மையிலேயே கள்ள போதகர்கள்.


தம்பி: ஆமாண்ணே, இப்பதான் புரிஞ்சுது. இருந்த என்னுடைய கவலையெல்லாம் போயிட்டுண்ணே.


அண்: ரொம்ப சந்தோஶம் தம்பி, கர்த்தருக்கு சித்தமானா பிறகு சந்திக்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets